கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட 62 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

15 Jul, 2021 | 08:50 PM
image

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன், தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 62 பேரையும் எதிர்வரும் 29 திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (15) உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த  63 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 58 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பயணம் செய்ய பஸ் ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட  64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை 2 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் குறித்த  வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 62 பேரின் வழக்குகள் இன்று வியாழக்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்   விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் ஏனைய 62 பேரும் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் காரணமாக அழைத்து வரமுடியாத காரணத்தினால்  காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான்   62 பேரையும், எதிர்வரும்   29 திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் இலங்கை சாரணர் இயக்கப்...

2026-09-11 10:18:13
news-image

சட்டவிரோத துப்பாக்கி, எறும்புண்ணி பாகங்களுடன் மூவர்...

2026-09-11 10:15:44
news-image

டிசம்பர் - ஏப்ரல் வரை மழைவீழ்ச்சி...

2026-09-11 10:11:35
news-image

பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக...

2026-09-11 10:12:07
news-image

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில்...

2026-09-11 10:11:03
news-image

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்...

2026-09-11 09:48:26
news-image

'ஷிரான் பாசிக்கின் சகாவுக்குச் சொந்தமான 10...

2026-09-11 09:51:57
news-image

யோஷிதவுக்கு எதிரான வழக்கு : பொய்...

2026-09-11 09:33:27
news-image

புலத்சிங்கள பகுதியில் புதையல் தோண்டிய மூவர்...

2026-09-11 09:43:21
news-image

மஹியங்கனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2026-09-11 09:43:29
news-image

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட ரூ.1,104 மில்லியன் பெறுமதியான...

2026-09-11 09:33:58
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: விசாரணைக்கு 03...

2026-09-11 08:56:14