(நா.தனுஜா)

பிரிட்டனின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை கைச்சாத்திட்டமைக்குக் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி, இதனால் பிரிட்டனிடமிருந்து அஸ்ராசெனேகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பாதிக்கப்படக்கூடும் என்றும் கவலை வெளியிட்டிருக்கின்றது.

பிரிட்டனின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விசனத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சீனாவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை கைச்சாத்திட்டிருக்கும் நிலையில், அதற்குக் கண்டனத்தை வெளியிடும் வகையிலும் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை சீராக முன்னெடுக்குமாறும் வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.