நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்திய காப்பீட்டு கூட்டுத்தாபனமானது ஆரம்ப பொது விடுப்புகளை மையப்படுத்தி பரிவர்த்தனைக்கான வணிக வங்கியாளர்களை விரைவில் நியமிக்க உள்ளதாக இந்திய உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக த எகோனொமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு நான்காவது காலாண்டில் பல முனைகளில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மை செயலாளர் துஹின் காந்தா பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எல்.ஐ.சியின் ஆரம்ப பொது விடுப்புகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடுகள் 90,000 கோடி ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் கோடியாக உயர்த்தக்கூடும் என்று கூறுகின்றனர். எவ்வாறாயினும் கொவிட் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரச வருவாயினை பின்னணியாக கொண்டு இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு பங்கு விற்பனையின் சரியான அளவு குறித்து முடிவு செய்யும் என்று பாண்டே உறுதியளித்தார். 1956 ஆம் ஆண்டின் எல்.ஐ.சி சட்டம் திருத்தப்பட்டு, விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாண்டே மேலும் குறிப்பிட்டார்.
த எகோனொமிக்ஸ் டைம்ஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM