(இராஜதுரை ஹஷான்)

வலு சக்தி அமைச்சர்  உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு  எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையாக மாற்றியமைக்க வேண்டும் என  ஐக்கிய  தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும்,கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று சிறிகொத்தாவில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,

தனிநபருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர  எதிர்க்கட்சியினர் எடுத்துள்ள தீர்மானத்தினால் எதிர் தரப்பினருக்கு எவ்வித  பயனும் ஏற்படாது. மாறாக ஆளும் தரப்பினரே பலமடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.