உலகின் விலையுயர்ந்த பர்கர் நெதர்லாந்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. 

நெதர்லாந்தின் வூர்துய்சனில் உள்ள டி டால்டன்ஸ் உணவகத்தின் சமையல் கலைஞரான  ரொபர்ட் ஜோன் டி வீன் என்பவரே விலையுயர்ந்த பர்கரைத் தயார் செய்துள்ளார்.

ரொபர்ட் ஜோன் டி வீன்  தங்கத் துகள்கள், பெலுகா மீன் முட்டை, கிங் நண்டு, பன்றி இறைச்சி, வெள்ளை உணவு பண்டங்கள், ஆங்கில செடார் சீஸ் மற்றும் கோபி லுவாக் என்ற கோப்பி விதைகளால் தயாரிக்கப்பட்ட  பார்பிக்யூ சோஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை வைத்து பர்கரைத் தயார் செய்துள்ளார்.

அவர் பர்கர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த பர்கர்  "கோல்டன் பாய்"  ( The Golden Boy) என்று அழைக்கப்படுகிறது.

பர்கர் ஒன்றின் விலை இலங்கை மதிப்பில் 11 இலட்சத்து 74  ஆயிரம் (5,000 யூரோ) ஆகும் . இந்த பர்கரை விற்று கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.