இந்த ஆண்டு கண்டி எசல பெரஹராவில் பங்கேற்கும் அனைத்து கலைஞர்களும் சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்தால் ஒரு உயிர் குமிழிக்குள் செல்லக்கூடும் என்று தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும். எவ்வாறாயினும், கண்டி எசல பெரஹராவில் பங்கேற்க உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் ஏற்கனவே கொவிட் -19 க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பண்டைய பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, பெரஹராவை வெற்றிகரமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கலைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பொருத்தமான முடிவுகள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்படும்.

பெரஹராவின் போது சிறப்பு சடங்குகளுக்கு வரும் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒரு குழுவினருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு கண்டி எசல பெரஹராவை நடத்துவது குறித்து சமீபத்தில் ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே தியவதன நிலமே இதனைக் குறிப்பிட்டார்.

பெரஹராவில் காப்பு கட்டும் நிகழ்வு ஆகஸ்ட் 09, கும்பல் பெரஹரா ஊர்வலம் ஆகஸ்ட் 13, ரந்தோலி ஊர்வலம் ஆகஸ்ட் 22, இறுதியாக ‘தியா கெப்பீம’ எனப்படும் நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் ஆகஸ்ட் 23 ஆம் திகதி முடிவடையும்.