'சேவையாற்றுவதற்கான சிறந்த இடம்" என்ற நாமம் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸிற்கு !

Published By: Digital Desk 4

15 Jul, 2021 | 06:15 AM
image

தேசத்தின் காப்புறுதியாளரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் Great Place to work என்ற நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 'சேவையாற்றுவதற்கான சிறந்த இடம்" என்கின்ற நாமத்தை வென்றுள்ளது. 

இதன் மூலம் நிறுவனத்தினுள் சேவையாற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக சிறந்த சேவைக்கலாசாரத்தை கட்டியெழுப்பியுள்ளமையை உறுதி செய்துள்ளது. நம்பிக்கை, கௌரவம், நடுநிலைத்தன்மை, அபிமானம் மற்றும் நட்புறவு போன்ற தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பணியாளர் குழாமின் காரணத்தாலேயே Great Place to work என்ற நிறுவகத்தால் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

1962ஆம் ஆண்டு அரச காப்புறுதி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ்  இலங்கையில் விசாலமான மற்றும் உறுதியான காப்புறுதி நிறுவனமாவதோடு 158 கிளை வலையமைப்புகளால் நாடு முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு சமூக மற்றும் கலாசார பின்னணிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பணியாளர் குழாமினரைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் நாட்டில் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலான புதிய எண்ணக்கருக்களை நிறுவனத்தினுள் உருவாக்கியுள்ளதோடு ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸின் கொள்கைகள், பெறுமதிகள் மற்றும் நெறிமுறைகள், கடமைகள் மற்றும் தனி மனித வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை கட்டியெழுப்புகின்றது.

இவ்வெற்றியை பற்றிய தமது கருத்தை வெளியிட்ட ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸின் தலைவர் ஜகத் வெல்லவத்த 'இலங்கையினுள் சேவையாற்றுவதற்கு சிறந்த இடமாக எமது நிறுவனம் தெரிவு செய்யப்பட்டமைக் குறித்து மகிழ்ச்சியடைவதோடு நாம் கடந்து வந்த பாதையில் ஒரு மைல்கல்லாகவே இதனைக்கருதுகின்றோம். 

காப்புறுதி நிறுவனம் எனும் வகையில் வாடிக்கையாளர்கள் எமது இதயமாக இருப்பதோடு மனித வள திட்டங்களுடன் வியாபார உத்திகளை ஒன்றிணைத்து நிறுவனம் முன்னேற்றப் பாதையில் சென்றிட வழிவகுக்கின்றது. எமது பணியாளர் குழாமினரை கௌரவிப்பதோடு, சமத்துவத்தை மேம்படுத்தி, நிறுவனத்தின் தேவைகள் மற்றும் பணியாளர்களது தேவைகளுக்கு இடையில் சமத்தன்மையை ஏற்படுத்தி அவர்களது அபிவிருத்திக்காக நாம் முயன்றிடுவோம்" என்றார்.

இது தொடர்பில் சந்தன எல் அலுத்கம கருத்து தெரிவிக்கையில், 

' இலங்கையில் சேவையாற்றுவதற்கான சிறந்த இடமாக நமது நிறுவனம் தெரிவாகியுள்ளமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எமது பணியாளர்களை தனித்தனியாக கருதாது சகலருக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்கி அவர்களை ஊக்குவிப்பதோடு சிறந்த பணியாளர் கலாசாரத்தையும் கட்டியெழுப்பி எமது ஒத்துழைப்பை வெளிக்காட்டியுள்ளோம். 

பணியாளர் குழாமினரை அடிப்படையாகக் கொண்ட சிறந்த கலாசாரம் மற்றும் சிறந்த படிமுறைகளுடனான நட்புறவுடனான சூழலொன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்பதுடன் பணியாளர்களை ஊக்குவிப்பதற்கான செயன்முறைகளையும் செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

பிரதி பிரதம அதிகாரி - மனித வளங்கள் மற்றும் பணியாளர் தொடர்புகள் ரோஹித்த அமரபால

அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

 ' 5 தசாப்தங்களுக்கும் மேலாக ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் பணியாளர்களை முதன்மைப்படுத்தி செயற்பட்டு வருவதோடு காப்புறுதி பற்றிய எண்ணக்கருவையும் தகவலையும் நாடு முழுவதும் பரப்பும் அவர்கள் எமது நிறுவனத்தின் சொத்துக்கள். பணியாளர்களின் வெவ்வேறு தன்மையை அறிந்து அதற்கு முக்கியத்துவமளிப்பதோடு சிறந்த பணியாளர் குழாமைக் கொண்ட வேலைச்சூழலை உருவாக்குவதற்கு முன்னோக்கிச் சென்றிடுவோம்" என்றார்.

Great Place to work நிறுவகம் வருடாந்தம் 10,000 க்கும் அதிகமான நிறுவனங்களுடன் பணியாற்றுவதோடு உலகளவில் 12.5 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இதன்பொழுது உலக நாடுகள் 69க்கும் அதிகமான இடங்களில் க்ரேட் ப்ளேஸ் டு வர்க் நிறுவனமானது 2012ஆம் ஆண்டு இலங்கையில் 'சேவையாற்றுவதற்கான சிறந்த இடம்" என்ற எண்ணக்கருவை ஆரம்பித்தது. பணியாளர்; குழாமினரை மேம்படுத்துவதற்காக உயர்ந்த நம்பிக்கையுடனான பணியாளர் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கும் கொண்டு நடாத்துவதற்கும் ஆலோசகராக பணியாற்றி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57