போதைப்­பொருள் பாவ­னையில் சிக்­கி­யுள்ள தோட்ட இளைஞர் சமூகம்

Published By: Robert

04 Sep, 2016 | 10:10 AM
image

மாத்­தளை மாவட்ட பெருந்­தோட்டப் பகுதி இளைஞர் சமு­தாயம் மற்றும் அங்­குள்ள பாட­சாலை மாண­வர்கள் எதை நோக்கிப் பயணம் செய்­கின்­றனர் என்ற கவ­லைக்­கு­ரிய கேள்வி அண்மைக் கால­மாக மக்­களால் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஒரு காலத்தில் கசிப்பு பழக்­கத்­துக்கு அடி­மை­யாக இருந்த பெருந்­தோட்ட மக்கள், மலை­யக சமூ­கத்­துக்கு ஒரு சீர­ழிவு வர­லாற்றை ஏற்­படுத்த முனைந்­த­போது ஓய்வு நேரத்தில் அம்­மக்­களின் கவ­னத்தை மாற்று திசையில் திருப்ப வேண்­டு­மென்­ப­தற்­காக அமரர் அமைச்சர் சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் தோட்­டங்கள் தோறும் விளை­யாட்டுக் கழ­கங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்ற முனைப்­புடன் செயல்­பட்டு அதன்­மூலம் அம்­மக்கள் ஓர­ளவு கசிப்பு பாவ­னை­யி­லி­ருந்து விடு­பட ஆத்­மார்த்த ரீதி­யி­லான ஒரு ஆரம்­ப­கட்­டத்தைத் தொடங்கி வைத்தார். இதனை நமது பெருந்­தோட்ட சமூகம் எந்­த­ள­வுக்குப் புரிந்து செயற்­பட்­டது என்­ப­தற்­கான ஆதா­ர­பூர்வ தக­வல்கள் இல்­லா­விட்­டாலும் கூட, முழு மலை­ய­கத்­திலும் அவ­ரது தீர்க்க தரி­சனம் வெற்றி பெற்­றி­ருந்த தன்­மையை மறுக்க முடி­யாது.

அதற்குப் பின்னர் நமது மக்­களை போதைப்­பொருள் கலா­சார சிந்­த­னை­யி­லி­ருந்து அவர்­களின் கவ­னத்தைத் திசை திருப்­பு­வ­தற்­காக அமரர் தொண்­ட­மானின் வழி­வந்த மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் பெருந்­தோட்டப் பகுதி கோவில்கள் அனைத்­தையும் புன­ர­மைப்­ப­தற்கும் அங்கு வரு­டாந்த தேர்த்­தி­ரு­விழா நடத்­தப்­ப­டு­வ­தற்கும் அக் கோவில்­க­ளுக்குத் தேவை­யான மூர்த்­தி­களின் சிலைகள், ஒலி­பெ­ருக்கிக் கரு­விகள் என்­ப­வற்றை பாரிய சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் பெற்றுக் கொடுத்தார். இதன்­மூலம் தோட்­டப்­பு­றங்­களில் கசிப்பு கலா­சாரம் குறை­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வா­னதை மறுக்க முடி­யாது. இது தவிர, மாத்­தளை மாவட்ட பெருந்­தோட்டத் துறை வாழ் மக்­களின் எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நலன்­களை பேணு­வ­தற்­கான உற்­சா­க­ம­ளிக்கும் வகையில் பல அமைப்­புகள் முன்­னின்று உழைத்து வரு­வது உண்மை.

தற்­போது மாத்­தளை மாவட்ட பெருந்­தோட்டப் பகு­தி­களில் உள்ள பாட­சா­லை­களின் வளங்கள் பாரிய அளவில் அபி­வி­ருத்தி அடைந்­துள்­ளன. குறை­பா­டுகள் சில இருந்­தாலும் அப்­பா­ட­சா­லை­களின் மூலம் மாண­வர்கள் தமது கல்வித் தரா­த­ரத்தை மேம்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு நிறை­யவே உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது­தவிர, பெருந்­தோட்­டத்­து­றை­யுடன் நேர­டி­யாகத் தொடர்பு கொண்­டுள்ள மாத்­தளை சுபீட்சம் இந்து சமூக நலன்­புரி ஒன்­றியம் கிட்­டத்­தட்ட பத்து அற­நெறி பாட­சா­லை­களை தாமே முன்­னின்று நடத்­தி­வ­ரு­வ­தோடு வாராந்தம் அங்­குள்ள பாட­சா­லை­க­ளுக்கும் சென்று பெற்­றோரை சந்­தித்து பல சமூக முன்­னேற்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது. இது­த­விர, மாத்­தளை ஸ்ரீ முத்து மாரி­யம்மன் தேவஸ்­தான கல்விப் பிரிவு, மாத்­தளை சைவ மகா சபை, மாத்­தளை சுவாமி விபு­லாந்தர் கலா­மன்றம், மாத்­தளை மகாத்­மா­காந்தி சபை, மாத்­தளை இந்து இளைஞர் பேரவை, மாத்­தளை இந்து மகா­சபை என பல்­வேறு அமைப்­புகள் தமது சேவை­களை அவ்­வ­மைப்­பு­களின் உறுப்­பி­னர்­களின் அர்ப்­ப­ணிப்­புடன் தமது நேரம், காலம், நிதி அனைத்­தையும் நன்­நோக்­குடன் செல­விட்டு சேவை செய்து வந்­தாலும் கூட குறித்த அமைப்­பு­களின் அர்ப்­ப­ணிப்­புகள் அனைத்தும் நீரில் கரைந்து சென்று கொண்­டி­ருப்­பது இப்­போது நிதர்­ச­ன­மாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

முழு நாட்­டை­யுமே சவா­லுக்­குள்­ளாக்கி வரும் போதைப் பொருள் பாவனை மலை­யகப் பகு­தி­க­ளிலும் ஊடு­ருவி வரு­வது ஒரு ஆரோக்­கி­ய­மான சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை.

மாத்­தளை கந்­தே­நு­வர எல்­க­டுவ பகு­தி­களைச் சூழ­வுள்ள தோட்­டங்­களில் அண்­மைக்­கா­ல­மாக கசிப்பு, சாராயம் ஆகி­ய­வற்­றுக்கு அப்பால் போதைப்­பொருள் கலந்த பாக்கு, புகை­யிலை, மாவா எனக்­கூ­றப்­படும் போதைப்­பொருள் என்­பவை மிகத் தாரா­ள­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வது பற்­றியும் இவற்றைத் தோட்டப் புறங்­க­ளி­லுள்ள சில பிர­ப­லங்­களின் வழித்­தோன்­றல்­களே முன்­நின்று நடத்­தி­வ­ரு­வ­தா­கவும் குறிப்­பிடும் இப்­ப­குதிப் பெற்றோர், தமது வீடு­களில் நாளாந்தம் இடம்­பெறும் திருட்டுச் சம்­ப­வங்கள் மேற்­படி போதைப்­பொருள் பாவனை கார­ண­மா­கவே தமது சொந்த பிள்­ளை­க­ளா­லேயே இடம்­பெ­று­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளையும் அவர்­களின் இளைய சந்­த­தி­யி­ன­ரையும் தலை­தூக்கி விட வேண்டும் என்று கங்­கணம் கட்டிக் கொண்டு பாரிய அளவில் அர்ப்­ப­ணிப்பு செய்துவரும் அமைப்புகள் இவ்வாறான போதைப்பொருள் பாவ னைக்கு எதிரான நடவடிக்கைகளை பெருந்தோட்டப் பகுதிகள் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன.

பல்வேறுபட்ட அரசியல், தொழிற்சங்க, பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துவரும் மலையக சமூகம் தமது எதிர்கால சந்ததிகள் திசைமாறி செல்வதை எவ்விதத்திலும் அனுமதிக்கக்கூடாது என்றாலும் இன்றைய நவீனமய சூழல் இதற்கு இடம்கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறியே!.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல

2023-10-02 17:17:52
news-image

ஊட்­டச்­சத்து குறை­பாட்டில் உயர் மட்­டத்தில் நுவ­ரெ­லியா...

2023-10-02 17:18:14
news-image

அங்கீகரிக்க மறுத்தலை அடையாளமாக்குவோம்....!

2023-10-02 15:24:56
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கு புத்துயிரூட்டிய 'கோடிலியா'

2023-10-02 15:24:27
news-image

2022ஆம் ஆண்டு நூறு கோடி ரூபாய்...

2023-10-02 13:35:16
news-image

இந்தியாவை கண்காணிக்கும் ஐந்து கண்கள்!

2023-10-02 09:09:54
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 

2023-10-01 19:13:25
news-image

நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் வெளி­யேற்றம் : பேரி­ன­வாதம்...

2023-10-01 19:15:04
news-image

பேரா­யரும் மைத்­தி­ரியும்

2023-10-01 19:15:29
news-image

மழை விட்டும் நிற்­காத தூவானம்

2023-10-01 19:15:56
news-image

வலிந்து மூக்கை நுழைத்த அலி சப்ரி

2023-10-01 19:16:10
news-image

மனித புதை­குழி அகழ்­வு­க­ளுக்கு போட்­டி­யாக தங்க...

2023-10-01 19:17:30