வீதி விபத்துக்களில் நேற்று மாத்திரம் 10 பேர் பலி

By Vishnu

14 Jul, 2021 | 09:47 AM
image

நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஏழு பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகளும் என்றும் ஏனையவர்கள் பாதசாரிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

ஒரு நாளில் 10 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்த அவர், கவனக் குறைவு, குடிபோதை, பொறுப்பற்ற ரீதிகளில் வாகனம் செலுத்துவதே இவ்வாறான விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right