மட்டக்களப்பு கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் : கைதான 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

By T Yuwaraj

13 Jul, 2021 | 05:15 PM
image

மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார். 

கடந்த மே மாதம் 18 ஆம் திகதி  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு  பெறப்பட்ட  நிலையில் அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த  நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கல்குடா பொலிசர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியினை பெற்று 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் நிலையில் அவர்கள் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்

இதனையடுத்து இன்று செவ்வாய்கிழமை (13) குறித்த  வழக்கு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது குற்றம்சாட்டப்பட்வர்கள் 10 பேரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் ஆஜராகிய நிலையில்; நிலையில்; கொரோனா தொற்று காரணங்களால்  நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாத நிலையில் அவர்களை  தொடர்ந்தும் 27 திகதிவரை 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி...

2022-11-30 16:45:02
news-image

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய...

2022-11-30 16:19:23
news-image

பண மோசடி : டுபாயிலுள்ள திலினியின்...

2022-11-30 20:13:14
news-image

தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்காவிட்டால் எதிர்காலத்தில் தோட்டங்களில்...

2022-11-30 16:40:28
news-image

மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை பெற்றோரிடமே வழங்க...

2022-11-30 15:56:37
news-image

ஒருநாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின்...

2022-11-30 18:34:10
news-image

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ள...

2022-11-30 16:31:06
news-image

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி :...

2022-11-30 17:31:17
news-image

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக்...

2022-11-30 16:55:29
news-image

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3...

2022-11-30 17:21:40
news-image

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழர்கள் தயாரில்லை...

2022-11-30 16:25:40
news-image

யூடியூப்பை பார்த்து இராணுவத்தினரின் ஸ்னைப்பர் துப்பாக்கி...

2022-11-30 16:28:07