(இராஜதுரை ஹஷான்)

ஒரு ஹேக்கர் நிலப்பரப்பில்  சேதன  பசளையை  உரத்தை  உற்பத்தி  செய்யும்    விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 12,500 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு  தொகையை வழங்க விவசாயத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2021 மற்றும் 2022  ஆண்டுக்கான பெரும்போகத்திற்காக 8,00,000  ஹேக்கர் நிலப்பரப்பு  அளவில் நெற் செய்கைக்கான சேதன உரத்தைத் தயாரித்துக் கொள்வதற்காக விவசாயத்துறை அமைச்சு வேலைத்திட்டமொன்றைத் தயாரித்துள்ளது.

அதனடிப்படையில் பிரதானமாக  விவசாய சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் பிரகாரம் விவசாயிகள் தரமான சேதன உரத்தைத் தயாரிப்பதற்கும், அனுமதிப்பத்திர உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளையின் அளவுகளை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய சேதன உரத்தைத் தயாரிக்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக சேதன உரத்தைத் தயாரித்து தமது விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹேக்கர் ஒன்றுக்கு 12,500 ஆயிரம்  ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்டயர்களுக்கு (05 ஏக்கர்கள்) அதிகரிக்காமல் ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்துவதற்காக  விவசாயத்துறை  அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.