கே .குமணன் 

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று காலை பாரம்பரிய  முறைப்படி ஆக்கிரமிப்புக்குள்ளாகிவரும் எல்லைக்கிராமத்தில் உள்ள  கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டதோடு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஆலய வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி பிரதேச செயலகத்தினால் இம்முறை 10 பேர் மாத்திரமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்போது நாட்டில் 150 பேர் வரை நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி இருப்பினும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களோடு ஆலய உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு பொங்கல் உட்சவம் ஆரம்பமாகியுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.