கொழும்பு பங்குச் சந்தை டிஜிட்டல் மயம்

13 Jul, 2021 | 10:25 AM
image

(செய்திப்பிரிவு)

கொழும்பு   பங்கு சந்தையை    டிஜிட்டல் மயப்படுத்தும்  இரண்டாம் கட்டச் செயற்பாடுகள்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையில்  அண்மையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு  பங்குப்  பரிவர்தனை, மற்றும் இலங்கை மூலதனச்சந்தை, ஆகியவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும்  செயற்பாட்டின்  முதற்கட்டம், கடந்த ஆண்டு  செப்டெம்பர் மாதம்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதலீட்டாளர்கள் உலகில்  எந்தவொரு இடத்தில் இருந்தும் மும்மொழிகளிலும் கொடுக்கல் வாங்கல்களை பெற்றுக் கொள்வதுடன், வினைத்திறனான சேவையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

முதலீட்டாளர்களின்  பங்குக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை  விரைவாக உறுதிப்படுத்தும் நிறுவன செயற்பாடுகள் குறித்து  முதலீட்டாளர்களை தெளிவூட்டல், முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுப்படுத்தல்,  உள்ளிட்ட  சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.

டிஜிட்டல் மயப்படுத்தும்  நடவடிக்கைகளைத் தொடர்ந்து  முதலீட்டாளர்களுக்கு  உலகில் எந்தவொரு  இடத்திலிருந்தும் சிங்களம்,  தமிழ், அல்லது ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும்  கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும். தகவல் பறிமாற்றங்களை  மேற்கொள்ளல் என்பவற்றுடன்  உள்நாட்டு நிறுவனங்களின்   ஊடாக கணக்குகளை திறக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right