மஹியங்கனை, மாபாகடவெவ பிரதேசத்தில் வீடொன்றுக்கு  முன்பக்கமாக சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் மீட்கப்பட்ட சடலம் மாபாகடவெவ பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய ஒருவரே என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.