மக்கள் வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய வைத்தியசாலைக்கு அதிநவீன செல்லிட ஸ்கேனர் இயந்திரம்

Published By: Digital Desk 2

12 Jul, 2021 | 05:21 PM
image

மக்கள் வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களின் ஓர் பகுதியாக மக்கள் வங்கியின் ஊழியர்களின் பங்களிப்புடன் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளித்திட தேவையான ரூ. 6 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியிலான அதிநவீன செல்லிட ஸ்கேனர் இயந்திரம் ஒன்றினை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கொவிட் 19 தீவிர சிகிச்சை பிரிவுக்கு கையளித்தனர். 

இந்நிகழ்வுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்ஹ, கொவிட் தீவிர சிகிச்சை பிரிவின் பிரதானி விஷேட வைத்தியர் தில்ஷான் பிரியங்கர, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பிரதான நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக்கு, பிரதி முகாமையாளர் (தொழில்முனைவோர் வங்கி நடவடிக்கைகள்) கிரிஷாணி நாரங்கொட, பிரதி முகாமையாளர்(வங்கி உதவிச் சேவைகள்) லலித் விதான, சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ கருத்து தெரிவித்த போது,

' இந்நாட்டின் பொது மக்களுடன் இணைந்துள்ள வங்கியாக நம் நாடு தேசிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இந்நாட்டு மக்களுக்காக பொருளாதார ரீதியாக கட்டியெழும்பிட தேவையான நிதியுதவிகளை மக்கள் வங்கி பெற்றுக் கொடுத்தது. மக்கள் வங்கியால் மற்றும் மக்கள் வங்கியின் சமூகத்தினரால் பெறுமதியில் அதிகமான PCR இயந்திரங்கள் உள்ளடங்கலாக சுகாதாரநல உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. அதேபோல் கொவிட் 19 தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியுதவிகளையும் மக்கள் வங்கி வழங்கியது. தற்போது அரசு வெற்றிகரமாக இப்பெருந்தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை புலப்படுகிறது. அதனடிப்படையில் எதிர்வரும் காலத்தில் நாட்டின் நிலைமை மிகவும் சிறப்பாக அமைந்திடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நாட்டின் கொவிட் 19 நோயாளர்களை குணப்படுத்துவதற்காக ஏதாவதொரு வகையில் பங்களிப்பு செய்திட மக்கள் வங்கியினால் முடிந்தமையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். 

மக்கள் வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்தும் போது தற்போது நிலவும் கொவிட் 19 பெருந்தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடைமுறைப்படுத்தும் விடயங்களுக்கு முன்னுரிமையளித்திட நாம் நடவடிக்கை எடுத்தோம். அதற்காக எமது ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தினை நன்கொடையாக வழங்கினர். நான் அவர்களையும் இத்தருணத்தில் நினைவுகூற விரும்புகின்றேன்.' எனத் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்ஹ இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

' எமது கொவிட் தீவிர சிகிச்சை பிரிவுக்கு இந்த இயந்திரத்தின் தேவை அதிகமாக இருந்தது. இந்த இயந்திரம் கொவிட் தீவிர சிகிச்சை பிரிவின் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்திட மிகவும் அவசியமானதொன்று ஆகும். தீவிர சிகிச்சை பிரிவின் பிரதான விஷேட வைத்தியர், வைத்தியர்கள், தாதியர் உள்ளடங்கலாக அனைத்து ஊழியர்களும் இந்த கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். அவர்களுக்கும் எமது வைத்தியசாலைக்கு இந்த இயந்திரத்தை பங்களிப்பு செய்த மக்கள் வங்கிக்கும் அவர்களது ஊழியர்களுக்கும் நான் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதிலும் குறிப்பாக எமக்கு அத்தியவசியமான வேளையில் இவ்வாறான பங்களிப்பினை செய்தமையையிட்டு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.' எனத் தெரிவித்தார். 

கொவிட் 19 பெருந்தொற்றின் தாக்கம் குறைந்த பின்னர் இந்த இயந்திரத்தினை வேறு நோயாளர்களின் தேவைக்காக பாவனைக்குட்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதற்கு முன்னர் கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மக்கள் வங்கி சமூகத்தினர் மற்றும் மக்கள் வங்கியின் ஓய்வுபெற்றோர் சங்கத்தின் மூலம் ரூ. 15 மில்லியன் நிதி நன்கொடையாக கடந்த ஆண்டு வழங்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58