சதீஷ் கிருஷ்ணபிள்ளை
இங்கிலாந்து மக்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி முக்கியமான நாள். அன்றையதினம் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன்அறிவித்திருக்கிறார்.
அன்றைய தினம், மூடப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்.ஆட்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், நிகழ்ச்சிகளுக்கும், ஒன்றுகூடல்களுக்கும்அனுமதி உண்டு.
முகக்கவசம் அணிய வேண்டுமா, சமூக இடைவெளி பேணவேண்டுமா என்பதையெல்லாம் அவரவர்தீர்மானிக்கலாம். இனிமேல் வைரஸுடன் சேர்ந்து வாழ்வது தான் வழியென அந்நாட்டு அரசு கூறுகிறது.
இந்தத் தீர்மானம் சரியானதா? ஒரு சாரார் தவறென்கிறார்கள். ஆபத்தான தீர்மானம்.இதன் விளைவுகள் பாரதூரமானவை என்பது அவர்களின் வாதம்.
கட்டுப்பாடுகளை எவ்வாறு தளர்த்த வேண்டும் என்பது அரசியல் ரீதியான தீர்மானம்தான். இது பற்றி வாதப்பிரதிவாதங்கள் இருக்கலாம்.
கட்டுப்பாடுகளை நாளையில்லாமல் இன்றே தளர்த்த வேண்டும் என்று எவரேனும்தீர்மானிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலுள்ள சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்க தராசுத்தட்டுகள் கிடையாது.
இதற்காக பல விடயங்களை ஆராய வேண்டும். கல்வி, தொழில்வாய்ப்பு, சுகாதாரப்பராமரிப்பு, சமூக செயற்பாடுகள் போன்றவை சீர்குலைவதால், எதிர்மறைத் தாக்கங்கள் ஏற்படுகின்றன.
கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் அமுலாக்கும் பட்சத்தில் வைத்தியசாலைகளில்சிகிச்சை தாமதமாகிறது. மக்களின் உளவியலில் தாக்கம் ஏற்படுகிறது. இந்த விடயங்களையும்பரிசீலிக்க வேண்டும்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM