கார்வண்ணன்

 ‘சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைதனியானதொரு சட்டத்தின் மூலம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்குமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ 

சேர்.ஜோன்.கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம், பாராளுமன்றத்தில்கடந்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன்  சேர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும்,இதற்கு எதிராக காரசாரமான வாதங்களை முன்வைத்திருந்தனர்.

பொதுக் கல்வித் திட்டத்தை இராணுவ மயமாக்கும் செயற்பாடு இது என்று,எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

சேர்.ஜோன்.கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தனியானதொருசட்டத்தின் கீழ், அதற்கென நியமிக்கப்படும் ஒரு அதிகாரிகள் குழுவின் கீழ் கொண்டுவரப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது தான் இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம்.

இலங்கையில் உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள, பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவே, பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் உயர் கட்டமைப்பாக இருந்துவருகிறது.

இதற்குக் கீழ் தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டங்களை வழங்கும்அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன.

மானியங்கள் ஆணைக்குழுவின் ஒப்புதல் பெற்றால் தான், குறித்த பட்டங்கள்இலங்கையில் செல்லுபடியாகும்.

ஆனால், சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தனியானதொருசட்டத்தின் மூலம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தான் இப்போதைய பிரச்சினைகளுக்கு காரணம். இலங்கை இராணுவத்தினர்,கடற்படையினர், விமானப்படையினருக்கு, உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காகவே இந்தப்பல்கலைக்கழகம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம்உருவாக்கப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.