ஹரிகரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நொபுஓகிஷி (Nobuo Kishii) கடந்த 6ஆம் திகதி நடத்திய சுமார் 30 நிமிட மெய்நிகர்கலந்துரையாடல் தொடர்பான தகவல், ஜனாதிபதி இந்தப் பத்தி எழுதப்படும் வரையில்,செயலகத்தினால் வெளியிடப்படவில்லை.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு அந்த தகவலை வெளியிட்ட பின்னர் தான்இவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெற்ற தகவல் வெளியே கசிந்தது.

பொதுவாக, இரண்டு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும் போது, சில இராஜதந்திரநெறிமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம்.

ஜனாதிபதி – ஜனாதிபதியுடனும், பிரதமர்  - பிரதமருடனும்,அமைச்சர்கள் – துறைசார் அமைச்சர்களுடனும் கலந்துரையாடுவார்கள்.

அதிகாரிகள் மட்டத்திலும் அவ்வாறான நெறிமுறையே கையாளப்படும்.

சில சிறப்பான சந்தர்ப்பங்களில் மட்டும், விதிவிலக்கான சந்திப்புகள்,கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

அவை நாடுகளின் முக்கியத்துவம் அல்லது குறிப்பிட்ட நபர்களின் வகிபாகம்என்பனவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், ஜப்பானிய பாதுகாப்புஅமைச்சருக்கும் இடையில் நடந்திருக்கின்ற பேச்சுக்கள் இவ்வாறான ஒன்று தான்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவேநேரடியாக- மெய்நிகர் முறையில் பேசியிருக்கிறார்.

அதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒன்று ஜனாதிபதி தான், பாதுகாப்புஅமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.