சுபத்ரா

கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர், இலங்கை விமானப்படையில் முதல் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்ட கிபிர் போர் விமானங்களை புதுப்பித்து, நவீனமயப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

49 மில்லியன் டொலர்கள் செலவில், இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் இன்டஸ்றீஸ் நிறுவனம், விமானப்படையின் ஐந்து கிபிர் போர் விமானங்களை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

கடந்த மாதம் இலங்கைக்கு வந்து சேர்ந்த இஸ்ரேலிய நிபுணர்களின் குழு, இந்த விமானங்களை புதுப்பித்து, நவீனமயப்படுத்துகின்ற பணியைத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கிபிர் போர் விமானங்களை 49 மில்லியன் டொலர்கள் செலவில்மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

இதையடுத்து, கடந்த மே மாதம், இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் இன்டஸ்றீஸ் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் இது தொடர்பான உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

அதற்கமைய விமானப்படையிடம் எஞ்சியிருக்கின்ற 5 கிபிர் போர் விமானங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட 6 கிபிர் விமானங்கள் 1996ஆம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கை விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டன.  பின்னர், மேலும் 9 கிபிர் போர் விமானங்கள் வாங்கப்பட்டன.

மூன்றாவது கட்ட ஈழப்போரின் இறுதிக்காலகட்டத்தில் விமானப்படையிடம் 15 கிபிர் போர் விமானங்கள் இருந்தன.

2001இல் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் 2 கிபிர் போர் விமானங்களும், போர்க்காலத்தில் நடந்த விபத்துகளில் 3 கிபிர் விமானங்களும், 2011இல் வான்சாகச ஒத்திகையின் போது 2 கிபிர் விமானங்களும் நாசமாகின.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.