ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிவருகின்றார்.

இந்நலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது வாழ்த்தினை பதிவுசெய்துள்ளார்.

இந்த வாழ்த்தினை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவுசெய்துள்ள நிலையில், குறித்த வாழ்த்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆயுள் மற்றும் சிறந்த உடல் நலனுடன் வாழ பிரார்த்திப்பதாக தனது வாழ்த்துச் செய்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.