எம்.எஸ்.தீன்

இலங்கை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், 30 வருடங்களாக நடைபெற்றஉள்நாட்டு யுத்தம், இனவாத அடாவடித்தனங்கள் போன்றவற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதொருசமூகமாக உள்ளனர். 

முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீது பொறாமை கொண்ட இனவாதிகள் அவர்களின்பொருளாதாரத்தை அழிப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அத்தகைய நடவடிக்கைகள்குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம்களுக்குரிய நியாயம்கிடைக்கவில்லை. 

இந்நிலையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் முஸ்லிம்களின் பொருளாதாரம், அரசியல்,சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் மீது எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதலின்பின்னர் கூரிய கத்தியில் நடக்க வேண்டியவர்களாக முஸ்லிம்கள் மாறியுள்ளார்கள். இத்தாக்குதலுடன்தொடர்புடையவர்கள் என்று பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

முஸ்லிம்களின்மத விவகாரங்களுடன் தொடர்புடைய உடை முதல் பல விடயங்கள் தமது தனித்துவத்தை இழக்க வேண்டியநிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நான்கு பக்கங்களிலும் நெருடிக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற முஸ்லிம்களுக்குகுரல் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம், முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் இருந்தாலும், அவர்களையும்நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடுவதற்குரிய செயற்பாடுகளையும் அவதானிக்க முடிகின்றன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.