இணையத்தை தாக்கிய 'வலிமை' புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்

Published By: Vishnu

13 Jul, 2021 | 07:40 AM
image

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என்பன நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

இது இணையத்தை புயலாக தாக்கியுள்ளதுடன், யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களையும் தற்சமயம் வரை கடந்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கொவிட் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைபட்டதால் படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தனர். 

இந் நிலையில் நேற்று (ஜூலை 11) திடீரென்று 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்ததுள்ளது படக்குழு.

மேலும், அஜித்துடன் யாரெல்லாம் நடித்துள்ளார்கள், படப்பிடிப்பின் நிலவரம் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 'வலிமை' படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

'வலிமை' படத்தில் அஜித்துடன் ஹியூஉமா குரோஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எடிட்டராக விஜய் வேலுகுட்டி, சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக கே.கதிர், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த புதிப்பிப்புக்கள் வெளியானதிலிருந்து ரசிகர்கள் டுவிட்டரில் #ValimaiFirstLook, #ThalaAjith, #Valimai மற்றும் #ValimaiMotionPoster போன்ற ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்தி வருகின்றனர். 

இப்போது வலிமையின் மோஷன் போஸ்டர் யூடியூப்பில் மிகவும் விரும்பப்பட்டதாகிவிட்டது. அதன்படி மோஷன் போஸ்டர் ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளுடன் யூடியூபில் பிரபலமாகி வருகிறது. 

மோஷன் போஸ்டரை வெளியிட்ட பிறகு, வலிமை படக்குழுவினர் திரைப்படத்திலிருந்து அஜித்தின் பல புகைப்படங்களை வெளியிட்டனர். 

இதில் ஒருபோதும் இல்லாத தோற்றத்தில் அஜித் மோட்டார் சைக்கிள் பந்தைய வீரராக கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

வலிமையின் போஸ்டரை அஜித்தின் 50 ஆவது பிறந்தநாளில் (மே 1) வெளியிடத் தயாராக இருந்தனர் படக்கு குழுவினர். இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக அந் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57
news-image

மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் சிங்கிள்...

2025-03-12 15:38:17
news-image

இலங்கை மக்கள் அன்பானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்;...

2025-03-12 17:05:46
news-image

நடிகை பாவனா நடிக்கும் 'தி டோர்'...

2025-03-12 15:35:09
news-image

படவா - திரைப்பட விமர்சனம்

2025-03-12 11:29:42
news-image

சத்யராஜ் - சசிகுமார் - பரத்...

2025-03-12 21:10:29
news-image

நடிகர் 'கயல்' வின்சென்ட் நடிக்கும் 'அந்தோனி...

2025-03-11 17:36:01