ரியோ ஒலிம்பிக்கில் பெட்மின்டன் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, ஒலிம்பிக் போட்டியின் போது பயன்படுத்திய ஆடை குறித்து தற்போது சர்ச்சையொன்று கிளம்பியுள்ளது.

லி-நிங் என்ற நிறுவனம் இந்திய ஒலிம்பிக் கழகத்துடன் ரூ. 3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்துடன் ஒலிம்பிக்கிற்கான உத்தியோகப்பூர்வமான அனுசரனை வழங்கியிருந்தது.

இந்நிலையில் சிந்து தான் விளையாடிய போட்டிகளின் போது லி-நிங் நிறுவனம் வழங்கியிருந்த ஆடையினை அணியவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கான ஆதாரத்தை அந் நிறுவனம் வெளியிட்டு முறைப்பாடும் செய்துள்ளது.

லி-நிங் நிறுவனத்தின் ஆடையின் நிறம் பிடிக்காததால் தான் சிந்து அதனை அணியவில்லை என கூறப்படுகிறது. தொடக்கத்தில் அந்த நிறுவனத்தின் ஆடைகளை அணிந்த சிந்து பின்னர் அதனை அணியவில்லை.

சிந்துவிற்கு மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்கள் ராசியானது என்பதால் தான் அவர் பங்கேற்ற போட்டிகளில் லி-நிங் நிறுவன ஆடைகளை அணியவில்லை என்ற தகவலும் பரவி வருகிறது.