கடந்த வாரம் மேற்கொண்ட பெரிய குடல் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் போப் பிரான்சிஸ் தனது முதல் பொது தோற்றத்தை வெளிப்படுத்தினார்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை ரோம் மருத்துவமனையில் பத்தாவது மாடி ஜன்னலின் பால்கனியில் இருந்து, சிகிச்சைக்கு பின்னரான தனது முதல் பொது தோற்றத்தை வெளிப்படுத்தினார் போப் பிரான்சிஸ்.

பால்கனியில் சுமார் 10 நிமிடங்கள் நலன் விரும்பிகளின் பார்வைக்காக நின்ற அவர், தான் குணமடைவதற்கான பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

84 வயதான பிரான்சிஸ், ஜூலை 4 ஆம் திகதி தனது பெருங்குடலின் ஒரு பகுதியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வு பெற்று வந்தார்.

2013 இல் போப்பாண்டவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் மேற்கொண்ட முதல் அறுவை சிகிச்சை இதுவாகும்.