கபில்

 கொரோனா தடுப்பூசி திட்டம் இப்போது இராணுவ மயப்படுத்தப்படுவதான குற்றச்சாட்டுஎழுந்திருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், அரச நிர்வாகம்,பல்வேறு வழிகளிலும் இராணுவமயப்படுத்தப்பட்டு வருகிறது என்ற பரவலான குற்றச்சாட்டுஇருந்து வருகிறது.

பிரதான அமைச்சுக்களின் செயலாளர்கள் தொடக்கம், அரச நிறுவனங்களின்தலைவர்கள், மற்றும் முக்கிய பதவிகளில், முன்னாள் இராணுவ அதிகாரிகள் பணிக்குஅமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, விவசாய அமைச்சின் செயலாளர்பதவியில் இருந்து, தாக்குப் பிடிக்க முடியாமல், விலகிப் போய்விட்டார்.

துறைமுக அதிகார சபையின் தலைவராக இருந்த முன்னாள் இராணுவத் தளபதிஜெனரல் தயா ரத்நாயக்க, அந்தப் பதவியில் இருந்து தூக்கப்பட்டு, விமல் வீரவன்சவின்அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

துறைமுக அதிகார சபைத் தலைவர் பதவியில் இருந்து ஏன் தூக்கப்பட்டோம்என்றும் தெரியாமல், விமல் வீரவன்சவின் அமைச்சுக்குள் போய், சிக்கிக் கொள்வதா என்றுமுடிவு செய்யவும் முடியாமல் அவர் இருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமக்கு விசுவாசமான, படை அதிகாரிகளைவைத்தே ஒட்டுமொத்த அரச நிர்வாகத்தையும் நடத்தி விடலாம் என்று எண்ணுகிறார்.

அதற்கேற்ற வகையிலேயே அவர் திட்டமிடல்களைச் செய்து உத்தரவுகளை வழங்கிவருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர்ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவை நியமித்த ஜனாதிபதி, கொரோனா தடுப்பு செயலணியின் தலைவராகஇராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்திருந்தார்.

போர்க்கால நடவடிக்கை போன்று இந்த தடுப்பு பணி முன்னெடுக்கப்படவேண்டும் என்பதற்காகவே இராணுவத்தினரை களமிறக்கியிருப்பதாக ஜனாதிபதிகூறியிருந்தாலும், அவருக்குள் இருக்கும் இராணுவ ஆட்சி மனோபாவம் தான் அதற்கு பிரதானகாரணம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.