இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜாகப்பை புத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளரான சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது  இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜாகப்புடன் இந்திய தூதரக அதிகாரி ரிவான்ட் விக்கிரம சிங்கும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா  இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.