மன்னார் மீனவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற தீர்மானம்

By T. Saranya

12 Jul, 2021 | 12:09 PM
image

(ஆர்.யசி)

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பைசர் தடுப்பூசிகளை மாற்றுத் தடுப்பூசியாக பயன்படுத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் அதனை கைவிட்டு, மன்னார் மீனவர்களுக்கும், வெளிநாடுகளுக்கு கற்கைகளுக்காக செல்லும் மாணவர்களுக்கும் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா முதலாம் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக மாற்று தடுப்பூசி ஏற்றுவது குறித்து ஆராயப்பட்ட வேளையில் தற்போது அமெரிக்கா வழங்கியுள்ள பைசர் தடுப்பூசியை ஏற்றவே தீர்மானம் எடுக்கப்பட்டது.  ஆனால் தற்போது அந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது. 

ஏனெனில் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கவுள்ளது.

எனவே அதனை பயன்படுத்த முடியும் என்பதனால் தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள பைசர் தடுப்பூசிகளை வடக்கு மீனவர்களுக்கும் அதேபோல் வெளிநாடுகளுக்கு கற்கைகளுக்காக செல்லவுள்ள மாணவர்களுக்கும் ஏற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுகின்ற நிலையில் இந்தியாவே அதிக அச்சுறுத்தல் நாடாக காணப்படுகின்றது. 

எனவே எமது வடக்கு மீனவர்கள் இந்திய எல்லைப்பகுதிகளுக்கு செல்வதும் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணுகின்ற காரணத்தினால் அவர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவே முதலில் மன்னார் மீனவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34