கொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம்

By J.G.Stephan

12 Jul, 2021 | 10:58 AM
image

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (12.07.2021) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான வேன் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுங்காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், விபத்தில் தொடர்பான மேலதிக  விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right