'தல' அஜித்தின் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

12 Jul, 2021 | 10:13 AM
image

ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பில் இருந்த 'தல' அஜித்தின் 'வலிமை' பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று நேற்று மாலை வெளியாகியிருக்கிறது.

'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்டபார்வை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'வலிமை'. இதில் 'தல: அஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் 'காலா' பட புகழ் பொலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, பவெல் நவகீதன், யோகிபாபு, மூத்த நடிகை சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். 'தல' அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தைத் தயாரித்த பொலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் இந்த படத்தையும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

கடந்த ஓராண்டு காலமாக 'வலிமை' படத்தின் அப்டேட்டை 'தல' அஜித்தின் ரசிகர்கள் வலிமை படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள்,  அரசியல்வாதிகள், சர்வதேச விளையாட்டு வீரர்கள் என பலதுறை பிரபலங்களிடம் இணையம் வாயிலாகவும், பதாகை வழியாகவும் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்  என இரண்டும் இம்மாதம் 15ஆம் திகதியன்று வெளியாகும் என தகவல் வெளியானது. இத்தகைய எதிர்பார்ப்புடன் காத்திருந்த தல அஜித் ரசிகர்களுக்கு திடீரெண்டு வலிமை படக்குழுவினர் இரட்டை விருந்தை அளித்திருக்கிறார்கள். அதாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று திடீரென்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இணையத்தில் எப்போதும் உலாவரும் 'தல' அஜித்தின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வைரலாக்கி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30