அனுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியின் தம்புத்தேகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.

யாத்திரைக்குச் சென்ற குறித்த பெண் வீதியை கடக்க முற்பட்ட போது இராணுவ கெப் வண்டியொன்று மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.