*சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தாஷாய் கிராமம்(Dazhai) 1960 களில் விவசாய வளர்ச்சியில் ஒரு தேசிய முன்னோடியாக (National pace setter) விளங்கியது. அந்த வேளையில், தரிசான மலைப்புறங்களை மலைச்சாரல் படியடுக்குத் தளமாக(Terraced farmlands) அமைந்த விவசாய நிலங்களாக மாற்றுவதில் அந்தக் கிராமத்தின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளுமாறு நாடளாவிய ரீதியில் கிராமப்புற மக்களை காலஞ்சென்ற தலைவர் மாவோ சே துங் கேட்டுக்கொண்டார்.
*1990களில் இருந்து தாஷாய் கிராமம் சூழலியல் சுற்றுலாத்துறையை (Ecological tourism) அபிவிருத்தி செய்யும் புதியதொரு பயணத்தை தொடங்கியது. அந்த துறை உள்ளூர் மக்களுக்கு வருவானத்தையும் நல்வாழ்வையும் கொண்டுவந்தது.
*தன்னிறைவை காண்பதற்கும் வறுமையை வெற்றிகொள்வதற்கும் மிதமான செழிப்புடைய வாழ்வை (Moderate prosperity) சாதிப்பதற்குமாக மிடுக்கான விவசாயிகள் கடுமையாக பாடுபட்டுக்கொண்டிருந்த எண்ணற்ற சீனக்கிராமங்களில் மாற்றங்களை தாஷாயின் கதை பிரதிபலித்தது.
தையுவான்,( சின்ஹுவா) - ஷாங்சி மாகாணத்தின் வடபகுதியில் 85 வயதான லீ யுமிங் என்ற விவசாயி அவரது சிறுவர் பராயத்திலும் இளம் பராயம் பூராவும் நீடித்த பட்டினியின் அழிக்கமுடியாத நினைவுகளைச் சுமந்தவராக வாழ்கிறார்.
" மரத்தோல், இலைகள், கோதுமை உமி, தவிடு ஆகியவற்றை நாம் சாப்பிட்டோம்.பெரும்பாலும் எங்களால் பெறக்கூடிய எல்லாவற்றையும் நாம் சாப்பிட்டோம் " என்று அவர் தங்களது ஆரம்பக்கால வாழ்க்கையை அவர் நினைவுகூர்ந்தார்.
தங்களது வயிற்றை நிரப்புவதற்காக லீ யுமிங்கும் தாஷாய் கிராமவாசிகளும் 1960 களிலும் 1970 களிலும் தரிசாகக் கிடந்த மலைப்புறங்களை மிகவும் பயன்தரக் கூடிய படியடுக்கான மலைசசாரல் விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு பாடுபட்டு தாஷாயை விவசாயத்தில் தேசிய வகைமாதிரியாக மாற்றுவதில் அதிசயிக்கத்தக்க சாதனையை படைத்தார்கள்.
1990களில் இருந்து அந்த கிராமம் சூழலியல் சுற்றுலாத்துறையை வளர்க்கும் புதிய பயணமொன்றில் இறங்கியது. அதில் கிராமமக்கள் உணவு விடுதிகள் மற்றும் அருங்காட்சி யகங்களை கிராமம் பூராவும் அமைத்து அலங்கரித்தார்கள். அவை கிராம மக்களுக்கு கணிசமான வருமானத்தையும் நல்வாழ்வையும் கொண்டுவந்தது.
தாஷாயின் கதை தன்னிறைவைக் காண்பதற்கும் வறுமையை வெற்றிகொள்வதற்கும் மிதமான செழிப்புடைய வாழ்க்கையை சாதிப்பதற்குமாக அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகள் வாழும் எண்ணற்ற சீனக்கிராமங்களின் மாற்றங்களை பிரதிபலித்து நிற்கிறது.
முன்னோடி கிராமம்
பட்டினி சீனாவைக் கொடுமைப்படுத்தியது. நாட்டின் மொத்த தானிய உற்பத்தி 1949 ஆம் ஆண்டில் சுமார் 11 கோடி 30 இலட்சம் தொன்களாகும்.(மக்கள் சீனக்குடியரசு தாபிக்கப்பட்டபோது ஆள்வீதத்துக்கு வருடாந்தம் 209 கிலோ கிராம் என்றும் இதைச் சொல்லலாம்)
மலைகளால் சூழப்பட்ட - வரட்சியினால் பாதிக்கப்பட்ட தாஷாய் கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு பெரிதாக நிலமில்லை. இயற்கையை வெற்றிகொள்வதற்கான துணிச்சலான முயற்சியொன்றில் கிராமவாசிகள் மலைகளைத் திறந்து படிநிரையான மலைச்சாரல் விவசாய நிலங்களை அமைப்பதற்காக வார்க்கால்கவை நிரவினார்கள்.இதன் மூலமாக ஆங்காங்கே கிடந்த வளமான நிலங்களை தொடுத்து படிநிரையான வலயங்களை மலைப்புறங்களில் அமைத்தார்கள்.
மலைகளில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட கற்கள் படிநிரை வலயங்களுக்கு கீழாக அணைகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த அணைகள் நீரும் மண்ணும் பசளையும் இழக்கப்படுவதைத் தடுத்தது.
லீ யுமிங் இந்த முன்னோடி பணியில் தனது 27 வயதில் இணைந்துகொண்டார்." ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு நாம் ஆரம்பித்து 10 மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் வேலைசெய்வோம். இந்த மலைச்சாரல் விவசாய நிலங்கள் இல்லையென்றால் எனது நான்கு பிள்ளைகளும் உயிர்தப்பியிருக்கமாட்டார்கள்.
இந்த வெற்றி தாஷாயை 1960 களில் விவசாயத்தில் ஒரு தேசிய முன்னோடி கிராமமாக்கியது. அந்த காலகட்டத்தில் தலைவர் மாவோ சே துங் தாஷாயின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளுமாறு நாடளாவிய ரீதியில் கிராமப்புற மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
சீன அரசாங்கம் எப்போதுமே விவசாயம், கிராமப்புறங்கள் மற்றும் கிராமிய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்துவந்திருக்கிறது. பல தசாப்தங்களாக நாடுபூராவும் விவசாய நவீனமயமாக்கலை மேம்படுத்தியதுடன் ஹைபிரைட் அரிசியையும் கண்டுபிடித்த பிறகு சீனா பட்டினியை அனுபவிக்கவில்லை.
2020 ஆம் ஆண்டில் சீனாவின் தானிய உற்பத்தி 66 கோடி 94 இலட்சத்து 90 ஆயிரம் தொன்களாகும். 1949 தானிய உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இது பெரும்பாலும் 6 மடங்கு அதிகமானதாகும். இதைச் சாதித்ததன் மூலமாக உலகின் மிகப்பெரிய சனத்தொகையுடன் கூடிய நாட்டிற்கான தானியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பசுமையை தங்கமாக மாற்றுதல்
கடந்த நூற்றாண்டில் தாஷாய் உச்ச உயர் மேம்பாடடைந்த காலப்பகுதியில் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் ஒரு கோடி பேர் அந்தக் கிராமத்தின் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வதற்காக அல்லது நவசீனாவின் விவசாய மைல் கல்லை பார்த்து மெச்சுவதற்காகவும் வந்தார்கள்.
கடந்த கால புகழோடு சேர்த்து தாஷாய் 1990 களில் செல்வச்செழிப்பு அடைவதற்கான ஒரு வலுவான தொழில்துறையாக கிராமிய சுற்றுலாத்துறையில் இறங்கியது. கிராமத்துக்கு உணவுபோடும் பணியை புகழ்பெற்ற படிநிரை மலைச்சாரல் விவசாய நிலங்கள் நிறைவுசெய்தன. அவற்றை படிப்படியாக மரக்கறி விவசாயம் பதிலீடு செய்யத்தொடங்கியது.
" தாஷாயில் சுமார் 53.3ஹெக்டேயர் படிநிரை மலைச்சாரல் வயல்கள் இருந்தன. அதில் மூன்றில் ஒரு பகுதி மீண்டும் காடுகளாக்கப்பட்டன" என்று கிராமத்தின் ஒரு அதிகாரியான லீ ஹைபின் கூறினார். கிராமம் இப்போது பசுமை வளர்ச்சி பாதையை பின்பற்றுகிறது.
கடந்த 20 வருடங்களாக கிராமம் உட்கட்டமைப்பு நிர்மாணத்தில் 10 கோடி யுவான்களுக்கும் அதிகமான (சுமார் ஒரு கோடியே 54 இலட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்)பணத்தை முதலீடு செய்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் கிராமிய சுற்றுலாத்துறைக்கான முக்கிய கிராமங்களில் முதல் தொகுதியில் தாஷாய் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அத்துடன் அதே வருடம் வனங்கள் மற்றும் புல்வெளி நிர்வாகத்தினால் தேசிய வன கிராமமாகவும் அந்த கிராமம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் இந்த சிறிய கிராமத்தை பார்வையிட மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகிறார்கள். 500 க்கும் அதிகமான கிராமவாசிகளின் வருமானத்துக்கான பிரதான மூலமாக சுற்றுலாத்துறை வருவாயே விளங்குகிறது.
லீ யுமிங்கின் மகனும் பேரனும் உள்ளூர் சுற்றுலாத்துறை கம்பனியொன்றில் பணி புரிகிறார்கள். பேரன் லீ ஷென்ஜியாங் நினைவுப்பொருட்கள் கடையொன்றையும் நடத்துகிறார். அதனால் அவர் வருடாந்தம் மொத்தம் ஒரு இலட்சம் யுவான்களுக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்.
தாஷாயில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சுற்றுலாத்துறை கம்பனியில் பங்காளராக இருக்கிறது. அதனால் அந்த குடும்பங்களுக்கு வருடாந்தம் தலா 3000 யுவான் பங்கு இலாபம் கிடைக்கிறது என்று அந்த கம்பனியின் தாபகரான 73 வயதானபெண்மணி குவோ ஃபெங்லியான் கூறினார். விவசாய அபிவிருத்தியில் கடுமையான இயற்றை சூழ்நிலைகளை எதிர்த்துப்போராடுவதில் பெண்களுக்கு தலைமை தாங்கி வழிகாட்டுவதால் இவருக்கு " இரும்புப்பெண்மணி " என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.இவர் 1990 களில் பல துறைகளையும் தழுவிய உள்ளூர் அபிவிருத்திக்கான குழுவொன்றை நிறுவினார்.
சியாவோகாங் வாழ்வை முன்னெடுத்தல்
சகல அம்சங்களிலும் ஒரு மிதமான சுபிட்சமுடைய சமுதாயத்தை கட்டியெழுப்புவதென்ற முதலாவது நூற்றாண்டு இலக்கை அடைந்துவிட்டதாக சீனா ஜூலை முதலாம் திகதி அறிவித்தது.
மிதமான சுபிட்சத்தை அடைவது அல்லது சீன மொழியில் "சியாவோகாங்"கை (XIAOKANG)அடைவது என்பது பல்வேறு அம்சங்களினால் அளவிடப்படுகிறது.பொருளாதார அடிப்படையில் நோக்குகையில், சியாவோகாங் 2010 ஆம் ஆண்டின் நிகர உள்நாட்டு உற்பத்தி இரு மடங்காக்கப்படுவதை வேண்டிநிற்கிறது. அத்துடன் 2020 அளவில் செலவிடத்தக்க ஆள்வீத வருமானமும் இரு மடங்காக்கப்படவேண்டும்.
சியாவோகாங்கின் கச்சிதமான வரைவிலக்கணத்தைப் பற்றி லீ யுமிங்கிற்கு தெளிவில்லை என்றபோதிலும், " எனது சிறுவர் பராயத்தில் கனவுகூட கண்டிருக்கமுடியாத நல்ல வாழ்க்கையொன்றை வாழழ்வதே " அதன் அர்த்தமாகும்" என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
தாஷாயில் கடந்த வருடம் கூட்டு வருமானம் 2 கோடி 30 இலட்சம் யுவான்களை எட்டியது.ஆள்வீத வருமானம் 26,000 யுவான்களை கடந்திருக்கிறது.கிராமத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளிலேயே மக்கள் வாழ்கிறார்கள். கிராமத்துக்கு நகரங்களில் உள்ளதைப்போன்றே மைய வெம்மையூட்டல் கட்டமைப்பு, நீர்விநியோகம்,வடிகாலமைப்பு ஆகியவை இருக்கின்றன.
மேலும்,குவோவின் சுற்றுலாத்துறை கம்பனி ஒவ்வொரு கிராமவாசிக்கும் வருடாங்த நலன்புரித் திட்டத்தில் 1000 யுவான்களை வழங்குகிறது.60 வயதுக்கு மேலானவர்கள் மாதாந்தம் இந்த கம்பனியிடமிருந்து 200 யுவான்களையும் 70 வயதுக்கு மேலானவர்கள் 300 யுவான்களையும் பெறுகிறார்கள்.
வாழ்க்கைத்தரத்தின் தொடர்சசியான முன்னேற்றத்தின் பின்னணியில் சீனமக்களின் மகிழ்ச்சியையும் தேசத்தின் புத்தெழுச்சியையும் வேணடிநிற்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சளைக்காத பணிகளே இருக்கின்றன.2020 ஆம் ஆண்டில் சீனாவின் நிகர உள்நாட்டு உற்பத்தி 100 ட்ரில்லியன் யுவான்களை தாண்டிவிட்டது.ஆள்வீத நிகர உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியான இரு வருடங்களில் 10,000 அமெரிக்க டாலர்களை தாண்டியிருக்கிறது.
கடந்த 8 வருடங்களில், சீனா கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீது கவனத்தைச் செலுத்தி இறுதியாக வறுமையில் 9 கோடியே 89 இலட்சத்து 90 ஆயிரம் கிராமவாசிகளை 2020 இறுதியளவில் வறுமையில் இருந்து விடுவித்தது.
லீ ஷென்ஜியாங் தலைநகர் பெய்ஜிங்கில் பணியாற்றினார்..ஆனால், அவரது சொந்தக்கிராமத்தில் வாழ்க்கை மிகவும் கவர்ச்சியூட்டுவதாக மாறிவிட்டது. தனது கிராமத்துக்கே திரும்பிவந்து குடியேற அவர் தீர்மானித்தார்.
" கிராமத்தில் பாலர் வகுப்புகள், பாடசாலைகள், வயது முதிர்ந்தோருக்கான பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் இருக்கின்றன.அங்கே சூழல் நன்றாக இருக்கிறது.வாழ்க்கை உண்மையாகவே சௌகரியமானதாக இருக்கிறது " என்று 30 க்கும் அதிகமான வயதுடைய அவர் சொன்னார்.
தெளிவான நீரும் வனப்புமிகுந்த மலைகளும் பயன்மதிப்புமிக்க சொத்துக்கள் என்று ஏன் மக்கள் கூறுகிறார்கள் என்பதை உண்மையிலேயே இப்போது அவர் விளங்கிக்கொள்கிறார்." தாஷாயில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக வனங்களை நன்றாககவனித்து பராமரிப்போம். அதில்தான் எமது எதிர்காலம் தங்கியிருக்கிறது."
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM