ஜனாதிபதியின் நேர ஒதுக்கீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கின்றோம்: ரோஹண லக்ஷ்மன் பியதாச

Published By: J.G.Stephan

11 Jul, 2021 | 10:51 AM
image

(ஆர்.ராம்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பை நடத்துவதற்கான நேர ஒதுக்கீட்டுக்காக சுதந்திரக்கட்சி காத்துக்கொண்டிருப்பதாக  அக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளில் முக்கியமானதொன்றாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காணப்படுகின்றது. இந்நிலையில், அரசாங்கத்துடன் செயற்படுவது தொடர்பில் நடைமுறை ரீதியான சில பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பாக இறுதியாக நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர்.

அதில் சிலர் அரசாங்கத்தினை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்கள். எனினும், தற்போது நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு உடனடியாக எவ்விதமான முடிவுகளும் எடுப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

நடைமுறைசார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முதற்கட்டமாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவருடைய நேர ஓதுக்கீட்டைப் பெறுவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19