நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களனி, களு, ஜின் மற்றும் நீல்வள கங்கைகள் ஆகியவற்றை அண்மித்து மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் திடீர் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று மாலை வரை 7 மாவட்டங்களில் 2,894 குடும்பங்களைச் சேர்ந்த 1,1737 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.