போராட்டம் செய்தால், தராதரம் பார்க்காது கைது செய்வோம்: அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை

Published By: Digital Desk 8

10 Jul, 2021 | 03:42 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எவர் செயற்பட்டாலும் தராதரங்கள் பார்க்காது அவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாராக இருந்தாலும் அவர் எந்த தராதரத்தில் இருந்தாலும் சட்டத்தை மீறினால் அதற்கு இடமளிக்க முடியாது. பணி பகிஷ்கரிப்பு மற்றும் போராட்டங்கள் நடத்துவது சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவில், மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுதல், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகளால் கொவிட் தொற்றுப் பரவும் அபாயம் உள்ளது. அதனால் அவ்வாறாக மக்கள் அதிகளவில் கூடும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அவர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய அவ்வாறான உத்தரவை வழங்க, விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. இதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அந்த உத்தரவை வழங்கியுள்ளார். அந்த உத்தரவை பொலிஸார் செயற்படுத்துகின்றனர். அதன்படி பொலிஸார் தொடர்ந்தும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்துவதுடன் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்வர். அதன் பின்னர்  அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அதனை தொடர்ந்து பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் தொடர்பான தீர்மானத்தை பொதுச் சுகாதார பரிசோதகர்களே மேற்கொள்வார்கள்.

அத்துடன் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதா? என்.டி.ஜன் பரிசோதனைகளை நடத்துவதா? அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதா? அல்லது மத்திய நிலையங்களுக்கு அனுப்புவதா? என்று தீர்மானிப்பர். இதன்படிதான்  கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் போது, நீர்கொழும்பில் வைத்து அவர்களுக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட அனைத்தும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே எதிர்காலத்திலும் போராட்டங்களை யார்  செய்தாலும் தராதரம் பார்க்காமல்  அவர்களை கைது செய்து நீதிமன்றத்துக்கு ஒப்படைப்போம். அதனை நிறுத்த மாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03
news-image

யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த...

2026-01-24 14:06:24
news-image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில்...

2026-01-24 13:36:37
news-image

தலங்கம மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருள்...

2026-01-24 11:18:58