எரிபொருள் விலையை குறைக்கவும் நிவாரணம் வழங்கவும் தீர்மானம் எடுக்கப்படும்: நிதி அமைச்சர் பஷில்

Published By: J.G.Stephan

10 Jul, 2021 | 03:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)
சகல பொருளாதார காரணிகளையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி எரிபொருள்  விலை  குறித்து ஒரு தீர்வை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் கடினமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமது கட்சியின் கொள்கையான பெறுபேறு பொருளாதாரத்தின் முன்னேற்றமாக அமையும்  என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 நிதியமைச்சராக பதவியேற்றதன் பின்னர்,  பெல்லன்வில ரஜமஹா விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் .

 சகல  பொருளாதார காரணிகளையும் கருத்திற் கொண்டு எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி  சிறந்த தீர்வை எதிர்பார்ப்பார் என எதிர்பார்க்கிறோம்.நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவடன் பொருளாதார ரீதியில் பல கடுமையான தீர்மானங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

 பொருளாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது. எமது திட்டங்கள் செயற்பாட்டு ரீதியில் வெளிப்படும். பொதுஜன பெரமுனவின் கொள்கை பெறுபேறாக காணப்பட்டது. அனைத்து விடயங்களிலும் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னேற்றமடைந்துள்ளோம். ஆகவே பொருளாதாரத்தையும் எம்மால் மேம்படுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04