மட்டகளப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் 260 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் (ஏற்றுமதி வலயம்) பொருளாதார அபிவிருத்தி வலயத்துக்கு புதிய முதலீட்டாளர்களுக்கு பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் 260 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் பொருளாதார அபிவிருத்தி வலயத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஆரம்பிப்பதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு ஒரளவேனும் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என நேற்று கம்பஹா மாவட்டத்தின் மீரிகம சுதந்திர பொருளாதார வலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஓட்ஸ் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் புதிய முதலிட்டாளர்களின் கைத்தொழில் நிறுவனத்தின் தொழில் நுட்பம் மற்றும் உணவு உற்பத்தி செயற்பாடுகள் குறித்து பார்வையிட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்த ஓட்ஸ் உணவு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கொண்டு பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சினூடாக நடைமுறைப்படுத்தும் விவசாயம் சார்ந்த உற்பத்திகளை அதிகரிப்பதற்கு இரசாயன பதார்த்தம் அற்ற சேதன பசளை தயாரிப்பதற்கு அகற்றப்படும் கழிவுகளை பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM