(க.கிஷாந்தன்)

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் இறம்பொடை - கல்லுக்குழி  பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன்  மூவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்லையை சேர்ந்த மொஹொமட் நிஸ்ராஸ் என்ற 17 வயது சிறுவனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவர்கள் இருவரும் பெண்ணொருவருமே குறித்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.