இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரை இன்று (02) சந்தித்துள்ளார். 

குறித்த சந்திப்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலங்கள், அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழு போன்றவை தொடர்பில் இலங்கை சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பாராளுமன்றம் கடந்த காலங்களில் நிறைவேற்றிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் பான் கீ மூன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்ல, அரசியல் கட்சிகள், திலங்க சுமதிபால, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, ஈ.சரவணபவன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.