(மயூரன்)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள ஐ.நா செயலாளரின் கவனத்தையீர்க்கும் முகமாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா செயலாளர் பான் கீ மூன் முன்னதாக வடமாகாண ஆளூநர் ரெஜினால்ட் குரேயை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் .


குறித்த சந்திப்புக்கு வருகை தந்த ஐ.நா செயலாளரின் கவனத்தையீர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


அதனை அடுத்து யாழ்.பொது நூலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பு நடைபெற்ற வேளையிலும்  பொது நூலக சூழலிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.