தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பாரதூரமான அடக்கு முறைகளில் அரசு: உயர் நீதிமன்றில் வழக்கு தொடர ரணில் தீர்மானம்

Published By: Digital Desk 8

08 Jul, 2021 | 02:44 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கும் கைது செய்வதற்கும் அதிகாரம் கிடையாது. இதற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் வைரஸ் தொற்று சுகாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இவ்வாறான கைதுகளை முன்னெடுக்க முடியாது என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில், பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை அடக்குவதற்கு பதிலாக பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகின்றது. இதனை விடுத்து அடக்குமுறைகளையும் கைதுகளையும் கட்டவிழ்த்து விடுவது என்பது ஏற்புடையதல்ல. இதனை அனுமதிக்கவும் இயலாது. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோஷலிச கட்சி என்பன முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளமை சட்டத்திற்கு முரணானதாகும்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்குள் இவ்வாறான கைதுகளை முன்னெடுக்க இயலாது. எனவே பாதிக்கப்படுகிறவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனடிப்படையில்  அடுத்த வாரத்தில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06