சஹ்ரானின் இஸ்லாமிய அடிப்படைவாத வகுப்புகளுக்கு உறுதிமொழி வழங்கியவர் கைது

Published By: Digital Desk 8

08 Jul, 2021 | 02:06 PM
image

உயிர்த்த ஞாயிறு  தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதி சஹ்ரானின் இஸ்லாமிய அடிப்படைவாத வகுப்புகளுக்கு சென்று உறுதிமொழி வழங்கிய சந்தேக நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணை பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

பயங்கரவாதி சஹ்ரான் ஹசிமின் இஸ்லாமிய அடிப்படைவாத வகுப்புகளுக்கு சென்று உறுதிமொழிகளை வழங்கிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் ஷியாம்  என்ற இந்த சந்தேக நபர் 2018 மற்றும் 2019 ஆகிய வருடங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் போதனை வகுப்புகளுக்கு சென்றுள்ளார்.

பயங்கரவாதி சஹ்ரானின் அப்படைவாத வகுப்புகளுக்கு சென்ற 14 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு  உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பயங்கரவாத விசாரணை பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் நாரம்மல பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32