நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நாடு முழுவதிலும் பல கிராமிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையகத்தின் திட்டத்தின் கீழ் வலஸ்முல்லை பகுதியில் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வலஸ்முல்லா பகுதிக்கு வர்த்தக் கட்டிடம் மற்றும் பொதுச் சந்தை அமைக்கப்படும். குறித்த வர்த்தக கட்டிடம் மூன்று மாடிகளை கொண்டிருக்கும். இந்த செயற்திட்டம் 150 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 62 மில்லியன் ரூபா செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிடத்தின் வடிவமைப்பின் படி, அடித்தளம் 38 வர்த்தக நிலையங்களை உள்ளடக்க கூடியது. மேலும் முதலாவது மாடியில் ஒரு கேட்போர் கூடம் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியாகும்.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 2021 நவம்பர் 09 ஆம் திகதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM