ஒலிம்பிக் போட்டிகளின் போது டோக்கியோவில் கொவிட்-19 தொற்று அவசரகால நிலையை விதிக்க ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்பின் மூலம் ஒலிம்பிக் போட்டிகள் மூடிய கதவுகளுக்கு பின்னால் அதாவது பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படலாம்.

ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வருகை புதிய தொற்று நோய்களுக்குத் தூண்டுகிறது என்ற பரவலான பொதுமக்கள் கவலையின் மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளன.

அமைப்பாளர்கள் ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களை தடைசெய்துள்ளனர் மற்றும் உள்நாட்டு ரசிகர்களுக்கு 50 சதவிகித திறன் கொண்ட அதிகபட்சமாக 10,000 பேருக்கு மாத்திரம் அரங்கத்தினுள் உள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகளை இறுதி செய்வதற்கான பேச்சுக்கள் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோவுக்கான நான்காவது அவசரகால நிலை ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை நடைமுறையில் இருக்கும் என்று அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பதிலுக்கு தலைமை தாங்கும் ஜப்பானின் பொருளாதார மந்திரி யசுடோஷி நிஷிமுரா கூறினார்.

இதனிடையே 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.