சுகாதார அமைச்சிற்கு 6 மில்லியன் ரூபா பெறுமதியான பி.சி.ஆர். இயந்திரம் அன்பளிப்பு

Published By: Digital Desk 2

08 Jul, 2021 | 02:39 PM
image

கொரானா நோயினைக் கட்டுப்படுத்துவதில் அந்த நோய் தொற்றியவர்களை மிகவிரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தி தேவைப்படும் போது விரைவாக சிகிச்சை அளிப்பது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. நோய்த் தொற்றினை கண்டறிவதற்கு பி.சி.ஆர் இயந்திரம் அவசியமாகும்.

முழு நாடும் கொரானாவிற்கு எதிராக போராடும் தற்போதைய காலகட்டத்தில் தமது சமூகப் பொறுப்பினை உணர்ந்து திரு S.T.S அருளானந்தன் (தலைவர், இலங்கை கட்டடப் பொருள் வணிகர் கழகம்) மற்றும் இணைப்பாளர் திரு S சண்முகநாதன் ஆகியோர் எடுத்த முன்முயற்சியை அடுத்து இலங்கை கட்டடப் பொருள் வணிகர் கழகத்தினரால் (Ceylon Hardware Merchants Association) ஆறு மில்லியன் பெறுமதியான பி.சி.ஆர் இயந்திரம் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சில் நேற்று  (07.07.2021) திரு S.T.S அருளானந்தன் திரு H.M. ஐயவீர (செயலாளர் இலங்கை கட்டடப் பொருள் வணிகர் கழகம்) மற்றும் திரு S. சண்முகநாதன் ஆகியோரினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன ஆகியோரிடம் பி.சி.ஆர் இயந்திரமானது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன்போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகங்களான வைத்தியர் S.சிறிதரன் மற்றும் வைத்தியர் S. தர்மரத்ன ஆகியோரும் உடனிருந்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14