(இராமேஸ்வரத்திலிருந்து ஆ. பிரபுராவ்)

இராமேஸ்வரம் மீனவர்கள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கடலில் இறங்கி போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதில் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களையும் 114 விசைபடகுகளையும் விடுதலை செய்யவேண்டும்,  நான்காம் கட்ட பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்  பாரம்பரிய கடல் பகுதியில் இழந்த மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

இன்று இரண்டாம நாள் போராட்டமாக  இராமேஸ்வரம் கடற்படை முகாம் எதிரே அமைந்துள்ள கடல்லில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஐந்து ஆயிரத்திற்க்கும் மேறப்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட சார்பு தொழிலாளர்களும் வேலையிழப்பதோடு  வர்த்தக நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளது.

இதனால் முதல் நாளே துறைமுகம்  சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது நாள் ஒன்றுக்கு சராசரி இரண்டு கோடி ரூபா வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும்  இந்நிலை நீடித்தால் மீன்பிடி தொழில் அழியும் அபாயம் ஏற்படும்  எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.