2020 யூரோ ; டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

Published By: Vishnu

08 Jul, 2021 | 09:47 AM
image

லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடந்த 2020 யூரோ கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இங்கிலாந்து வீரர் ஹாரி கேனின் எக்ஸ்ட்ரா டைம்  கோல் மூலம் டென்மார்க்கை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.

இங்கிலாந்து 1966 ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு பிறகு முதல் முறையாக பெரிய தொடர் ஒன்றில் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது, மேலும் யூரோ கால்பந்து தொடரில் முதல் முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.

ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் டென்மார்க்கின் அபாய வீரர் மிக்கெல் டாம்ஸ்கார்ட் திகைப்பூட்டும் ஃப்ரீகிக்கில் 25 அடியிலிருந்து நேராக கோலுக்குள் திணிக்க டென்மார்க் முதலில் 1-0 என்று முன்னிலை பெற்றது. 

ஆனால் 39 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கொடுத்த நெருக்கடியில் டென்மார்க் வீரர் சிமன் கியா தன் கோலுக்குள்ளேயே சேம்சைடு கோல் அடிக்க இங்கிலாந்து அதிர்ஷ்டத்தில் சமன் செய்தது.

பிறகு ஆட்டம் 1-1 என்ற நிலையில் கூடுதல் 30 நிமிடம் ஒதுக்கப்பட்டதில் 104 ஆவது நிமிடத்தில் பெனால்டி கிக்கை டென்மார்க் கோல் கீப்பர் தடுக்க திரும்பி வந்த பந்தை ஹாரி கேன் கோலாக மாற்ற 2-1 என்று இங்கிலாந்து வென்று 55 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய கால்பந்து தொடரின் இறுதிக்குள் கால்வைத்துள்ளது.

ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41