மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளைப் பாவித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அளவீட்டு அளவுகளும்; நியமங்கள் சேவைகளும் திணைக்கள பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌஸாத் தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களாய் ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான, செங்கலடி, ஏறாவூர் மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலுள்ள அரிசிஆலைகள், சில்லறைகடைகள், பொதுச்சந்தை, மீன்விற்பனை மையங்கள், பழக்கடைகள் உட்பட 80 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

இதில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளை பாவித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 10 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதம் 6ம் 7ம் திகதிகளில் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.