(இராமேஸ்வரத்திலிருந்து ஆ. பிரபுராவ்)

மண்டபம் அருகே வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவந்தனர்  அப்போது குஞ்சார்வலசை கடற்கரைப் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் உயிருடன் பதுக்கி வைத்திருந்த  15 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முத்து மற்றும் பிரபாகரன்  ஆகியோரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் ஒன்னறை இலட்சம் ரூபாவென அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் . மேலும் கடத்தல் சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளிகளை  தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்த வனத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.