தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஐவரும், இன்று போகாகும்பரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர், பொலிசாரினால் குறித்த  ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த முதலாம் திகதி வெலிமடைப் பகுதியின் பொரலந்தை என்ற இடத்தில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, விவசாயிகளின் போராட்டத்தை, மேற்படி ஐவரும் ஏற்பாடு செய்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே, மேற்படி ஐவரும் தேடப்பட்டு வந்தனர். இதையடுத்தே, இவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பான முன்னால் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரட்ன மற்றும் விவசாய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரட்ன உள்ளிட்ட ஐவருமே பொலிசாரினால் தேடப்பட்டு வந்தனர். 

இதையடுத்து இவர்கள் வெலிமடைப்பகுதியின் போகாகும்பரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து, பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

இவர்கள் விசாரணையின் பின்னர், வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினமே ஆஜர் செய்யப்படுவார்கள் என, போகாகும்பரை பொலிசார் தெரிவித்தனர்.