கிழக்கின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பூ .பிரசாந்தன்

By J.G.Stephan

07 Jul, 2021 | 06:12 PM
image

கிழக்கின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளர்
பூ .பிரசாந்தன் தெரிவித்துள்ளார் 

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகிய பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, நான் பிணையில் விடுதலையன  காரணம் உண்மையில் நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுகின்றது. இலங்கையில் நீதியை நாம் நம்புகின்றோம் உண்மையில் சிறந்த நீதிபதிகள் இருக்கின்றார்கள்.

 தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கரத்தினை பலப்படுத்தி அனைவரும் ஒன்றிணைந்து வேலைசெய்ய வேண்டும்.

 கிழக்கு மாகாண மக்களின் செயற்பாடுகள் தொடர்ந்து முடக்கப்பட்டதன் காரணமாக ஒரு தூர நோக்கின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம். உண்மையில் சிறைச்சாலையிலிருந்து எனது தலைவர் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right